தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி | பிளாஷ்பேக் : நிஜமான குத்துச்சண்டை காட்சி இணைக்கப்பட்ட படம் | காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? | லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு |
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். திருமண வாழ்க்கை முறிவிற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து வந்தார் சமந்தா. இதற்கு அவரின் உடல்நிலையும் ஒரு காரணம். அவருக்கு ஏற்பட்ட தசை அழற்சி பிரச்னையால் சில காலம் சிகிச்சையில் இருந்தார். இருப்பினும் கதையின் நாயகியாக யசோதா, சாகுந்தலம் போன்ற படங்களிலும், சிட்டாடல் போன்ற வெப்சீரிஸிலும் நடித்தார். தற்போது படம் மற்றும் வெப்சீரிஸில் நடிக்கிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட சமந்தா கூறியதாவது, "தொடர்ந்து படங்களில் நடிப்பது சுலபம். ஆனால் நான் எனது ஒவ்வொரு படத்தையும் கடைசி படம் போல் நடிக்க விரும்புகிறேன். இனிமேல் சவாலான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பேன். ஒரு படத்தை தேர்ந்தெடுத்துக்கும் போது பலவிதமாக யோசித்து முடிவெடுக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.