எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு |

நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்து ஜுன் மாதம் தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'மகாராஜா'. இப்படம் கடந்த வாரம் நவம்பர் 29ம் தேதி சீனாவில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது.
அங்குள்ள சீன சினிமா ரசிகர்களிடமும் இப்படம் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் வெளியாகி ஒரு வாரம் முடிய உள்ள நிலையில் மொத்தமாக 40 கோடி வசூலை அப்படம் வசூலித்துள்ளது.
சீனாவில் அதிகம் வசூலித்த தமிழ்ப் படம் என்ற சாதனையை ஏற்கெனவே கடந்துவிட்டது 'மகாராஜா'. ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படம் அங்கு வெளியாகி 22 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்தது. 'மகாராஜா' படம் முதல் வாரத்தைக் கடந்தும் சீனாவில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
           
             
           
             
           
             
           
            