2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

சிவாஜி நடிப்பில் வெளியான 'நவராத்திரி' படத்தில் இடம்பெற்ற 'இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்' என்ற பாடல் திருடர்களின் திரை மறைவு வாழ்வைக் காட்டும். அந்தப் பாடலின் வரியை நினைவூட்டும் வகையில் 'இரவினில் ஆட்டம் பார்' என்கிற பெயரில் ஒரு முழு நீள கிரைம் த்ரில்லர் திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இந்தப் படத்தை ஆர் எஸ் வி மூவிஸ் சார்பில் சேலம் ஆர்.சேகர் தயாரித்துள்ளார். ஏ.தமிழ்ச்செல்வன் இயக்கி உள்ளார். கதை நாயகனாக உதயா என்கிற உதயகுமார் நடித்துள்ளார். நாயகியாக கிரேஸி நடித்துள்ளார். இவர் மல்லி, கண்மணி அன்புடன், திருமகள் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர். இவர்கள் தவிர பருத்தி வீரன் சரவணன், அஸ்மிதா, ஈஸ்வரன், அடையாளம் பாண்டு, சி.எம். துரை ஆனந்த் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஜினோபாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். நல்லதம்பி இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் தமிழ் செல்வன் கூறும்போது “பள்ளி மாணவிகளுக்கு எதிராகப் பாலியல் குற்றம் செய்பவர்களையும், பள்ளி மாணவர்களைப் போதை மருந்துக்கு அடிமையாக்கும் நாசக்காரக் கும்பலையும் எதிர்த்து ஒரு நிழல் கதாநாயகன் இரவினில் ஆடும் ஆட்டம் தான் இந்தப் படம். அந்தக் காமக் கொடூரர்களையும் போதை அடிமைக் கொடியவர்களையும் மர்மமான முறையில் அழித்து ஒழிக்கும் கறுப்பு நாயகன் தான் இந்தப் படத்தின் கதாநாயகன். படத்தின் முழுக்கதையும் இரவில் நடக்கிறது. சேலம் ஏற்காடு பகுதியில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி படத்தை முடித்துள்ளோம். தீபாவளிப் பண்டிகை தாண்டி நவம்பர் 8ம் தேதி வெளிவருகிறது” என்றார்.