பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

தனுஷ் நடித்த 'அசுரன்' படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார், மலையாளத் திரையுலகின் சீனியர் கதாநாயகியான மஞ்சு வாரியர். அந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக, இரண்டு இளைஞர்களுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படுத்தினார். அதன்பின் அஜித் நடித்த 'துணிவு' படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
தற்போது, ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்திலும், விஜய் சேதுபதி நடிக்கும் 'விடுதலை 2' படத்திலும் நடித்துள்ளார். 'வேட்டையன்' படத்தின் முதல் சிங்கிளான 'மனசிலாயோ' பாடல் நேற்று முன்தினம் வெளியானது. பாடல் பற்றி சில சர்ச்சைகள் எழுந்தாலும் வழக்கம் போல அனிருத்தின் ரசிகர்கள் பாடல் சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் படம், பாடல்கள் என்றாலே அவர் மீதுதான் ரசிகர்களின் பார்வை இருக்கும். அதை 'ஜெயிலர்' படத்தில் இடம் பெற்ற 'காவாலய்யா' பாடல் மாற்றியது. அந்தப் பாடலுக்கு தமன்னா ஆடிய கிளாமர் ஆட்டம், ரஜினியையே ஓரம் கட்ட வைத்தது.
தற்போது வெளியாகியுள்ள 'மனசிலாயோ' பாடலில் எந்தவிதமான கிளாமரும் இல்லாமல், அழகான நடன அசைவுகளுடன் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் மஞ்சு வாரியர். 'லிரிக் வீடியோ'வில் அவர் இடம் பெற்றுள்ள சில வினாடி வீடியோக்களிலேயே வசீகரித்தவர், முழு பாடலும் வெளியாகும் போது இன்னும் ரசிக்க வைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.