சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் |

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில் கடைசி கட்ட படப்பிடிப்புக்கு முன்பு பல மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில், அடுத்து ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக உள்ளதாம். அந்த பாடலை ஸ்பெயின் நாட்டுக்கு சென்று படமாக்க திட்டமிட்டுள்ளார்கள்.
மேலும் தற்போது இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி இப்படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதற்கு முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறுகிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன், ஜெயம் ரவியின் பிரதர், கவின் நடித்த பிளடி பெக்கர் போன்ற படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தீபாவளிக்கு அஜித்தின் விடாமுயற்சி வெளியாவது உறுதி செய்யப்பட்டால், தீபாவளி ரேஸில் இருந்து ஓரிரு படங்கள் பின்வாங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.