ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படம் குறித்தும் படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் குறித்தும் கலவையான விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் படம் மிகப்பெரிய அளவில் வசூலித்தது. இந்த நிலையில் பிரபல ஹிந்தி நடிகரும், முன்னா பாய் எம்பிபிஎஸ் படத்தில் சஞ்சய் தத்தின் வலது கரமாக நடித்திருந்தவருமான அர்ஷத் வர்சி என்பவர் கல்கி படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் பார்ப்பதற்கு ஜோக்கர் போல இருந்தது என்று கிண்டலாக விமர்சித்து இருந்தார்.
இதற்கு ரசிகர்களும் திரை உலகை சேர்ந்தவர்களும் தனித்தனியாக இதற்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்தின் தலைவரும், நடிகருமான விஷ்ணு மஞ்சு இதுகுறித்து ஹிந்தி திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “நடிகர் அர்ஷத் வர்சி இப்படி பிரபலமான ஒருவரை குறித்து மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சோசியல் மீடியாவில் சில வார்த்தைகள் உறவுக்கு பாலம் கட்டும். சில வார்த்தைகள் பகையை உருவாக்கி விடும். நாம் எல்லோரும் ஒரு குடும்பம் அதனால் பேசும்போது வார்த்தைகளை சரியாக பயன்படுத்தும்படி அர்ஷத் வர்சிக்கு அறிவுரை கூறுங்கள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.