‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” |
இயக்குனர் ஷங்கரின் மகள் டாக்டர் அதிதி சங்கர். 'விருமன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் 'மாவீரன்' படத்தில் நடித்தார். தற்போது நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளியுடன் 'நேசிப்பாயா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார்.
கார்த்தி ஜோடியாக நடித்திருக்கும் அதிதி அடுத்து அண்ணன் சூர்யா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆகாஷ் முரளியின் அண்ணன் அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சிவா மனசுல சக்தி' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜேஷ்.எம் இயக்குகிறார். ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.