செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், சங்கத்தமிழன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள பார்டி படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. தற்போது அவர் கைவசம் எந்த படமும் இல்லை. சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இதுதவிர விளையாட்டு மற்றும் ரேஸில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛நான் எதிர்மறையாக என்ன நினைத்தாலும் அது நடந்துவிடும். ஒருமுறை என் பாய் பிரண்ட் என்னை ஏமாற்றிவிடுவது போன்று கற்பனை செய்திருந்தேன். அதுபோலவே நடந்து, அவர் இன்னொருவருடன் சென்றுவிட்டார். இப்போது வைத்துள்ள கார் முதல் எதிர்காலத்தில் வாங்க உள்ள கார் வரை நான் கற்பனை செய்து வைத்தவையே'' என்கிறார் நிவேதா.