கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
பிலிம்னாட்டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குனர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், பிரியாமணி, தெய்வதிருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'கொட்டேஷன் கேங்'. டிரம்ஸ் சிவமணி இசையமைத்துள்ளார்.
3 ஊர்களில் நடக்கும் சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் பணத்திற்காக பெண்களே கொலை செய்வது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இப்படத்தில் சாரா, பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சக மாணவனுடன் போதைப் பொருள் பயன்படுத்துவதும், காதல் வயபடும் பாத்திரத்திலும் அருமையான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதாக படக்குழு தெரிவித்துள்ளது. பிரியாமணிக்கு படம் முழுவதும் சண்டை காட்சிகள் இருக்கின்றதாம்.
அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் நடிகை பிரியாமணி பேசுகையில், ‛‛இயக்குனர் விவேக்கிற்கு நன்றி. இவர் என்னிடம் சொன்ன முதல் கதை சில காரணங்களால் டேக் ஆப் ஆகவில்லை. இரண்டாவது சொன்ன இந்த கதை பிடித்துவிட்டது. என்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுவரை நடித்திராத கதாபாத்திரம். சன்னிலியோன் பற்றி வேறொரு இமேஜ் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், இந்தப் படத்தில் அவருடைய பத்மா கதாபாத்திரம் உங்கள் எண்ணத்தை மாற்றிவிடும். ஜாக்கி ஷெராப்-ம் எங்களுக்கு சப்போர்ட்டாக இருந்தார். படம் ஜூலையில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்'' என்றார்.
நடிகை சன்னி லியோன், "இந்தப் படத்தில் எனக்கு நிறைய ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. என்னைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இந்தப் படம் நிச்சயம் மாற்றும். படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்” எனப்பேசினார்.
படம் பற்றி இயக்குனர் விவேக்குமார் கண்ணன் பேசியதாவது: முதலில் பிரியாமணி வைத்துதான் படத்தை ஆரம்பித்தோம். அடுத்து ஜாக்கி ஷெராப், சன்னி லியோன் என அடுத்தடுத்து வந்தார்கள். காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்துவது எளிதான விஷயம் கிடையாது. கேமரா மேன், ஸ்டண்ட் மாஸ்டர், மேக்கப் ஆர்டிஸ்ட் என எல்லோருமே சிறப்பாக பணி செய்தார்கள். பிரியாமணி, சன்னி லியோன், ஜாக்கி ஷெராப், அக்ஷயா என எல்லோருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பேபி சாராவுக்கு சிறப்பான கதாபாத்திரம் படத்தில் இருக்கிறது. தியேட்டரில் உங்களுக்கு அந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என்றுதான் நிறைய வேலை பார்த்திருக்கிறோம். படம் ஜூலையில் பாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.