Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அட்லியின் புதிய 'கண்டிஷன்', ஆச்சரியத்தில் தெலுங்கு சினிமா

31 மார், 2024 - 04:30 IST
எழுத்தின் அளவு:
Atlees-new-Condition-surprises-Telugu-cinema

'ஜவான்' படத்தின் மூலம் பான் இந்தியா இயக்குனராக உயர்ந்துள்ளவர் தமிழ் இயக்குனரான அட்லி. அவரது அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போவது அல்லு அர்ஜுன் என தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் தயாரித்து பான் இந்தியா படமாக அப்படத்தை வெளியிடப் பேசி வருகிறார்கள்.

பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தற்போது அட்லி புதிய 'கண்டிஷன்' ஒன்றைப் போட்டுள்ளாராம். அதன்படி படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை அவருக்குத் தர வேண்டும் என்று கேட்கிறார் என டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுவாக ரஜினிகாந்த் போன்ற உச்ச நடிகர்கள் சிலர்தான் இப்படி லாபத்தில் பங்கு கேட்பார்கள். ஆனால், ஒரு இயக்குனர் இப்படி கேட்பது தெலுங்கு திரையுலகத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

எல்லா பேச்சுவார்த்தையும் சுமூகமாக முடிந்தால் அல்லு அர்ஜுன் பிறந்தநாளான ஏப்ரல் 8ம் தேதி இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
‛சுந்தர் சி படம் என்றால் ஓகே, அவ்வளவு நம்புகிறேன்': தமன்னா‛சுந்தர் சி படம் என்றால் ஓகே, அவ்வளவு ... ரஜினியின் தோல்வி பட டைட்டிலையே மீண்டும் வைக்க லோகேஷ் கனகராஜ் முடிவு? ரஜினியின் தோல்வி பட டைட்டிலையே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Jayaraman Ramaswamy - Chennai,இந்தியா
01 ஏப், 2024 - 03:04 Report Abuse
Jayaraman Ramaswamy நஷ்டம் வந்தால் ஏற்று கொள்வாரா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)