தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‛விடாமுயற்சி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருடன் த்ரிஷா, ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் அஜர்பைஜான் நாட்டில் நடக்கிறது. சமீபத்தில் படப்பிடிப்புக்கு ஓய்வு கிடைத்த நிலையில் சென்னை திரும்பிய அஜித் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் என குடும்பத்தினர் உடன் நேரத்தை செலவிட்டார்.
இடையில் சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட அஜித்திற்கு காதிற்கு கீழே சிறிய ஆபரேஷன் நடந்தது. இதனால் விடாமுயற்சி படப்பிடிப்பு தள்ளிப்போகலாம் என கூறப்பட்டது. ஆனால் உடனடியாக அஜித் படப்பிடிப்புக்கு கிளம்பிவிடுவார் என்றார்கள்.
இந்நிலையில் அஜித் மீண்டும் பைக்கில் டூர் கிளம்பிவிட்டார். துணிவு படத்திற்கு இடையே பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித் பின்னர் விடாமுயற்சி படம் துவங்க காலதாமதமான சமயத்திலும் பைக்கில் டூர் கிளம்பினார். இப்போது மீண்டும் பைக்கில் டூர் கிளம்பிவிட்டார்.
இதுதொடர்பான போட்டோ, வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் பைக் ரைடிங் தொடர்பாக சக பைக் ரைடுருக்கு ஆசிரியர் போல் அஜித் டிப்ஸ் வழங்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது. இந்த முறை அஜித்தின் பைக் சுற்றுப்பயணத்தில் நடிகர் ஆரவ்வும் பங்கேற்றுள்ளார்.