Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனர் மீது ‛மீ டூ' குற்றச்சாட்டை முன்வைத்த நடிகை

10 மார், 2024 - 16:22 IST
எழுத்தின் அளவு:
Manjummel-Boys-Fame-Chidambaram-in-#MeToo-Scandal?-Influencer-Prapti-Elizabeth-Accuses-Director-of-Sexual-Assault-on-Insta


மலையாளத்தில் உருவான ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' திரைப்படம் கேரளாவை விட, தமிழகத்தில் அதிக தியேட்டர்களில் ஓடி வருகிறது. இத்திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. கமல் நடித்து வெளிவந்த 'குணா' படத்தின் 'ரெபரென்ஸ்' தான் இந்தப் படத்தின் இப்படிப்பட்ட வெற்றிக்கு முக்கிய காரணம்.

கமல்ஹாசன் உள்ளிட்ட பல தமிழ்க் கலைஞர்களும் படத்தின் இயக்குனர் சிதம்பரம் மற்றும் படத்தில் நடித்த நடிகர்களை வியந்து பாராட்டினர். இந்த நிலையில், இயக்குனர் சிதம்பரம் மீது பெண் ஒருவர் ‛மீ டூ' குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பிரபலமும் நடிகையுமான ப்ரிப்தி எலிசபெத் என்பவர் சிதம்பரம் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் இயக்கிய முதல் திரைப்படமான ‛ஜான். இ. மேன்' என்ற படத்தில் அம்மு என்ற கேரக்டரில் ப்ரிப்தி எலிசபெத் நடித்திருந்தார். 2021ல் வெளியான இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் தன்னிடம் இயக்குனர் சிதம்பரம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார் ப்ரிப்தி எலிசபெத்.

அவரின் இந்த பதிவுக்கு கீழே பல ரசிகர்களும் சிதம்பரத்திற்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். படம் வெளியாகி 3 ஆண்டுகளாக எதுவும் சொல்லாமல், அடுத்த படம் பெரிய அளவில் வெற்றிப்பெற்றதும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் இப்படி குற்றச்சாட்டு கூறுவதாக எலிசபெத்துக்கு எதிராகவும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சுற்றுலா சென்ற இடத்தில் ரொமான்டிக் போட்டோஷூட் நடத்திய நயன்தாரா - விக்னேஷ் சிவன்!சுற்றுலா சென்ற இடத்தில் ரொமான்டிக் ... நடிகர் சங்கத்திற்கு கமல் நிதியுதவி: விஷால் நன்றி நடிகர் சங்கத்திற்கு கமல் நிதியுதவி: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Raj Kamal - Thiruvallur,இந்தியா
15 மார், 2024 - 14:22 Report Abuse
Raj Kamal எலி செத்து போச்சு... இப்போ கூட மஞ்சுமேல் பாய்ஸ் ஓடலேன்னா ஒருத்தர் கூட இதப்பத்தி பேசமாட்டாங்க. மூன்று வருஷம் கோமாவுல இருந்தாங்க போலிருக்கின்றது...
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15 மார், 2024 - 06:39 Report Abuse
Mani . V 2021 ல் நடைபெற்றது பாலியல் சீண்டலில் வருமா, வராதா? என்று மூன்று வருடமாக சிந்தித்துக் கொண்டே இருந்து, இப்பொழுது புகார் கூறியிருக்கும் இந்த பைத்தியத்துக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in