சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
சென்னை: தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை ‛36 வயதினிலே' படத்தில் நடித்ததற்காக ஜோதிகா வென்றார். இவர் தவிர மோகன்ராஜா, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட மற்ற கலைஞர்களும் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டு திரைத் துறையினருக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இடையில் சில ஆண்டுகள் தடைபட்டு இருந்த நிலையில் மீண்டும் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 2015-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த திரைப்பட விருதுகள் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், ராஜரத்தினம் கலையரங்கில் நடந்தது. அமைச்சர்கள் சாமிநாதன், மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்த ஜோதிகா படத்திற்கு சிறந்த நடிகை, சிறந்த படம் சிறப்பு பரிசு உட்பட 7 விருதுகள் கிடைத்துள்ளன. அதே போன்று ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன், சிறந்த படம் உட்பட 6 விருதும், மாதவன் நடித்த இறுதிச்சுற்று படம் சிறந்த நடிகர், இயக்குனர் உள்ளிட்ட 6 விருதுகளையும் வென்றுள்ளன.
சிறந்த நடிகர் சிறப்பு பரிசை ‛வை ராஜா வை' படத்தில் நடித்த கவுதம் கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இயக்குனர் மோகன் ராஜாவுக்கு தனி ஒருவன் படத்திற்காக சிறந்த கதாசிரியர் விருது வழங்கப்பட்டது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை உத்தம வில்லன், பாபாநசம் படங்களுக்காக ஜிப்ரான் பெற்றார். சிறந்த நடிகருக்கான விருது இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த படத்திற்கான சிறப்பு பரிசு இறுதிச்சுற்று படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த குணசித்தர நடிகருக்கான விருது (அபூர்வ மகான் ) தலைவாசல் விஜய்-க்கு வழங்கப்பட்டு உள்ளது.
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது நடிகர் சிங்கம்புலிக்கு அஞ்சுக்கு ஒன்னு படத்திற்காக வழங்கப்பட்டது. சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருது நடிகை தேவதர்ஷினிக்கு ( 36 வயதினிலே, திருட்டு கல்யாணம் )வழங்கப்பட்டு உள்ளது. சிறந்த இயக்குனர் சுதா கொங்காரா ( இறுதிச்சுற்று) , சிறந்த குணச்சித்திர நடிகை கவுதமி (பாபநாசம் ) வழங்கப்பட்டது.
சிறந்த படம் முதல் பரிசு தனி ஒருவன், இரண்டாம் பரிசு பசங்க, மூன்றாம் பரிசு பிரபா -க்கு வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களுக்கு, காசோலை தங்கப்பதக்கம் நினைவு பரிசு சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. விருதாளர்களுக்கு அமைச்சர்கள் சாமிநாதன், சுப்பிரமணியன் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.