கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
2012ம் ஆண்டு வெளிவந்த 'சுந்தரபாண்டியன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் லட்சுமி மேனன். 'கும்கி' படத்தின் மூலம் மேலும் புகழ்பெற்றார். தமிழ் பெண்களின் சாயலோடு இருப்பதால் ரேவதி போன்று இவரும் ஒரு ரவுண்ட்டு வருவார் என்று கணிக்கப்பட்டார். குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகிர்தண்டா, கொம்பன், வேதாளம், மஞ்சப்பை, மிருதன், றெக்க என அவர் நடித்த பெரும்பாலான படங்களும் வெற்றி பெற்று முன்னணி நடிகை ஆனார்.
திடீரென படிக்கப்போகிறேன் என்று அறிவித்தார். ஒரு மலையாளியைத்தான் திருமணம் செய்வேன், எனக்கு நடிப்பை விட நடனம் தான் முக்கியம் என ஏகத்துக்கு பேசினார். இதனால் அவருக்கு கணிசமான வாய்ப்புகள் குறைந்தது. சில வருட இடைவெளிக்கு பிறகு முத்தையா இயக்கிய 'புலிக்குத்தி பாண்டி' படத்தில் நடித்தார். கடைசியாக சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். படம் தோல்வி அடைந்தாலும் லட்சுமி மேனனின் நடிப்பும், நடனமும் பேசப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அவர் ஆரி அர்ஜூனாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ராஜசேகர பாண்டியன் இயக்குகிறார். மைம் கோபி, வையாபுரி, பிளாக் பாண்டி, ஷெர்லி பவித்ரா உள்பட பலர் நடிக்கிறார்கள், கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது.
இதில் கலந்து கொண்ட லட்சுமி மேனனை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். முன்பு போல உடல் எடை கூடியிருந்தார். அருகில் உள்ள முதல் புகைப்படம் அவர் உடல் எடையை குறைத்து 2022ம் ஆண்டு வெளியிட்டது. 'சந்திரமுகி 2' படத்தில் சாராசரி உடல் எடையுடன் இருந்தார். இப்போது மீண்டும் உடல் எடை கூடி காணப்படுகிறார். ஒரு வேளை இந்த படத்தின் கேரக்டருக்காக உடல் எடை கூட்டி இருக்கிறாரா? என்றும் தெரியவில்லை.