ஐமேக்ஸில் ஜெயிலர் 2 | ஜூன் 1ல் இளையராஜாவின் ‛சிம்பொனி' வெளியீடு | ஜூலையை குறிவைக்கும் ‛டயங்கரம்' | 'பெத்தி' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | பரிமளா அண்ட் கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா...? | 19 ஆண்டுகளுக்கு பின் ஜீவா, அஞ்சலி கூட்டணி | கர்ணபரம்பரையாக கேட்டு மகிழ்ந்த “கண்ணகி” கதையின் கலையுலக சாதனை | ‛கருப்பு 300' கோடி வசூலிக்குமா?, மூக்குத்தி அம்மன் 3 உருவாகுமா? | கீர்த்தி சுரேஷின் ‛ரப்தார்' ரிலீஸ் தேதி மாற்றம் | 'பெத்தி' படத்திற்கு வந்த புதிய சிக்கல் |

நெல்சன் இயக்கத்தில் நடித்த ஜெயிலர் படத்தை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தை முடித்ததும் மீண்டும் நெல்சன் இயக்கும் ஜெயிலர்- 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஜெயிலர் படத்தில் சிலை கடத்தல்கார்களிடம் இருந்து தனது மகனை மீட்கும் ரஜினி, பின்னர் மகனையே கொலை செய்வதோடு கதை முடிந்திருக்கும்.
இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிலை கடத்தல் காரர்களுக்கும் ரஜினிக்கும் இடையே மோதும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஜெயிலர்-2 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே சந்திரமுகி, குசேலன், சிவாஜி, தர்பார், அண்ணாத்த என ஐந்து முறை ரஜினியுடன் நடித்துள்ள நயன்தாரா, ஆறாவது முறையாக மீண்டும் இப்படத்தில் இணையப்போகிறார்.




