தாய் கிழவி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஜியோ ஹாட்ஸ்டார் | 'ஜனநாயகன்' வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஜன.19ல் விசாரணை | பராசக்தி படத்திற்கு இப்படி வாழ்த்தினார் ரஜினி : சிவகார்த்திகேயன் | ஜனநாயகன் பட விவகாரம் : விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் | அருண் விஜய், முத்தையா கூட்டணியில் புதிய படம் | சிரஞ்சீவி படத்தின் முதல் நாள் வசூல் 84 கோடி | நான் நிறைய கதைகள் எழுதி வருகிறேன் : நடிகர் சூரி | சிரஞ்சீவி படத்தின் ரேட்டிங்கிற்கு தடை : விஜய் தேவரகொண்டாவின் வருத்தமும், சந்தோஷமும் | 'சர்வம் மாயா' வெற்றியால் தூசு தட்டப்படும் நிவின்பாலியின் பேபி கேர்ள்' | டைகர் ஆப் மார்சியல் ஆர்ட்ஸ் பட்டம் வென்ற பவன் கல்யாண் |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி கோட்'. இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் புத்தாண்டு சமயத்தில் வெளியிடப்பட்டது. அந்த இரண்டு போஸ்டர்களிலும் 'இரண்டு விஜய்' இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு 'தி கோட்' ஸ்குவாடு என விஜய்யின் அணியில் இருப்பவர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். கையில் துப்பாக்கியுடன் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் இருக்கும் போஸ்டரைப் பகிர்ந்து 'கோட் ஸ்குவாடு' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஒரு போஸ்டருடன் 'கோட்' பொங்கல் அப்டேட் முடிகிறதா, அல்லது இன்னும் சில போஸ்டர்கள் வெளியாகுமா என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது.