இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
லண்டனை சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன் 'மதராசபட்டினம்' படத்தின் மூலம் நடிகை ஆனார். அதன்பிறகு ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் ஆகியோருடன் நடித்தார். பாலிவுட் படங்களிலும் நடித்துள்ள அவருக்கு திடீரென வாய்ப்புகள் இல்லாமல் போகவே லண்டனுக்கே திரும்பி அங்கு ஆங்கில வெப் தொடர்களில் நடித்தார். இந்த நிலையில் அவரை தமிழில் அறிமுகப்படுத்திய ஏ.எல்.விஜய் மீண்டும் அவரை அழைத்து வந்திருக்கிறார். அவர் இயக்கி உள்ள 'மிஷன் சேப்டர் 1' என்ற படத்தில் லண்டன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் எமி ஜாக்சன். படம் நாளை வெளிவருகிறது.
உடல்நலம் சரியில்லாத காரணத்தால் படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் இருந்த எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இயக்குநர் விஜய் தனது திரைப்படங்களில் வலுவான பெண் கதாபாத்திரங்களை உருவாக்குபவர். இந்த கதாபாத்திரங்களின் தாக்கம் மிகவும் ஆழமானது. எந்தளவுக்கு தாக்கம் என்றால், திரைப்படங்கள் வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பிறகும் கூட பார்வையாளர்கள் அந்த கதாபாத்திரங்களை நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். அவருடைய 'மதராசப்பட்டினம்' படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானதை நான் பாக்கியமாக கருதுகிறேன்.
இயக்குநர் விஜய் தனது திரைப்படங்களில் எனக்கு முக்கியமான பாத்திரங்களைத் தொடர்ந்து கொடுத்து வருகிறார். அந்த வகையில், 'மிஷன் சாப்டர் 1' சந்தேகத்திற்கு இடமின்றி எனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். பெரும்பாலான இயக்குநர்கள் என்னை ஒரு அழகான காதல் கதாநாயகியாகதான் பார்த்துள்ளனர். அதனால், எனக்கு ஆக்ஷன் கதாபாத்திரம் வழங்கப்படும் என்று நான் எதிர்பார்த்ததே இல்லை. இருப்பினும், விஜய் ஸ்கிரிப்டை விவரித்து, என் போலீஸ் கதாபாத்திரத்தை சொன்னவுடன் அதன் முக்கியத்துவத்தை உணர முடிந்தது. உடனடியாக அந்த பாத்திரத்திற்கு தயாராகத் தொடங்கினேன். ஆக்ஷன் தளத்தில் நான் இயங்குவதற்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. இது எனது சினிமா வாழ்க்கையில் நிச்சயம் ஒரு மைல்கல் என உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு எமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.