'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

தமிழ் சினிமாவில் அவ்வப்போது காதல் கிசுகிசுக்கள் வருவதுண்டு. அதைப் பற்றிய தகவல்கள் பரபரப்பாக வெளியானாலும் சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாகவே இருப்பார்கள். ஒன்றாக சேர்ந்த சுற்றுவார்கள், விழாக்களில், நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள். ஆனால், தங்களுக்குள் எதுவும் இல்லை, நட்பாகத்தான் பழகுகிறோம் என்பார்கள்.
அப்படியான ஒரு ஜோடியாக சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி ஜோடி இருந்தது. சித்தார்த் இதற்கு முன்பே திருமணமானவர். அவரது மனைவியை விவாகரத்து செய்த பின் சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். அவரும் சமந்தாவும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று சில வருடங்கள் முன்பே செய்திகள் வந்தது. ஆனால், இருவரும் திடீரெனப் பிரிந்தனர், சமந்தா, நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டார்.
அதிதி ராவ் ஹைதரிக்கும் ஏற்கெனவே திருமணமாகி பிரிந்துவிட்டார். இந்நிலையில் அதிதியும், சித்தார்த்தும் 'மகா சமுத்திரம்' படத்தில் நடித்த போது காதலில் விழுந்தனர். அதன்பின் பல சந்தர்ப்பங்களில் ஜோடியாக சுற்றி வந்தனர். தாங்கள் இருவரும் காதலிப்பதைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இருவரும் சேர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
“மகிழ்ச்சி, ஆசீர்வாதம், சிறப்பு… மேஜிக்கான மகிழ்ச்சிக்காக.. காதல், சிரிப்பு, வானவில், அதிர்ஷ்ட விலங்கு… மந்திரத்துகள்... அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் 2024” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதற்கு மேலும் தாங்கள் காதலிக்கவில்லை என இந்த ஜோடி பொய் சொல்ல முடியாது.




