ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்த 'சலார்' படம் பத்து நாட்களுக்கு முன்பு பான் இந்தியா படமாக வெளிவந்தது. ஆனால், தெலுங்கு மாநிலங்களில் மட்டுமே படத்திற்கு பெரிய வரவேற்பு இருந்தது. தமிழகம், கர்நாடகா, கேரளா, வட இந்தியா மாநிலங்களில் எதிர்பார்த்த வரவேற்பையும், வசூலையும் பெறவில்லை. இருப்பினும் உலகம் முழுவதும் 625 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
படத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, “கான்சார்' தலைவிதியை நான் தீர்மானிக்கும் போது, நீங்கள் அனைவரும் அமர்ந்து புத்தாண்டை அருமையாகக் கொண்டாடுங்கள் டார்லிங்ஸ். 'சலார் - த சீஸ்பயர்' படத்தை சொந்தமாக்கி அதை பெரிய வெற்றி பெற வைத்ததற்கு நன்றி,” எனத் தெரிவித்துள்ளார் பிரபாஸ்.
தெலுங்கு மாநிலங்கள் தவிர பிற மாநிலங்களில் வசூல் அதிகம் இல்லையென்றாலும் வெளிநாடுகளில் வரவேற்பைப் பெற்றதாலும் இப்படம் 600 கோடி வசூலைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். படத்திற்கான லாபம் எந்த அளவில் இருக்கும் என்ற தகவல் இனிமேல்தான் வெளியாகும்.