செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடிக்க தொடங்கிய போது அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவருக்கும் இடையே காதல் உருவாகி, அந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த செப்டம்பர் மாதம் அவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் அசோக் செல்வனைப் போலவே கீர்த்தி பாண்டியனும் சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அசோக் செல்வன் - மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள சபாநாயகன் என்ற படம் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதேபோல், கீர்த்தி பாண்டியன் கதையின் நாயகியாக நடித்திருக்கும் கண்ணகி என்ற படமும் அதே நாளில் திரைக்கு வருகிறது. இப்படி ஒரே நாளில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் நடித்த படங்கள் மோதிக் கொள்வதால் பாக்ஸ் ஆபீஸில் யாருடைய படம் வெற்றி பெறப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.