நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள படம் 'சில நொடிகளில்'. மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ் ஜார்னரில் தயாராகி உள்ள இந்த படம் வருகிற 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. முழு படமும் லண்டனில் தயாராகி உள்ளது. படத்தில் ரிஷியும், புன்னகை பூ கீதாவும் அன்பான கணவன் மனைவி. இவர்களின் வாழ்க்கைக்கு இடையில் வருகிறார் மாடல் அழகி யாஷிகா ஆனந்த். ரிஷியின் முன்னாள் காதலி. அவருக்கு ஒரு பெரிய பிரச்சினை. இப்படியான கதையில் என்ன தீர்வு என்பதுதான் படம்.
படத்தில் நடித்திருப்பது பற்றி யாஷிகா ஆனந்த் கூறும்போது “நிஜத்தில் நான் ஒரு மாடல் அழகி. படத்திலும் மாடல் அழகியாக நடித்திருக்கிறேன். அதனால் நடிக்க மிகவும் எளிதாக இருந்தது. 'துருவங்கள் பதினாரு' என்ற திரில்லர் படத்தில் இருந்துதான் எனது சினிமா தொடங்கியது. நானும் திரில்லர் படத்தின் மிகப்பெரிய ரசிகை அதனால் இந்த படத்தில் விரும்பி நடித்தேன். ரிச்சர்டுடன் நடித்ததன் மூலம் அவர் எனக்கு நல்ல நண்பர் ஆனார். இதன் மூலம் நான் அஜித் சாருக்கும் நெருக்கமாகி இருக்கிறேன். அஜித் சாரின் மிகப்பெரிய ரசிகை நான். என்றார்.