ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழகத்தில் புதிய கலச்சாரமாக பல்வேறு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடனம், பாடல் என கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஞ்சித் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி குறித்து கடுமையாக சாடியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், 'சமீபத்தில் ஒரு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பெண் குழந்தைகளை அரைகுறை ஆடையுடன் தெருவில் ஆடவிடுவது எல்லாம் மனவேதனையாக இருக்கிறது. என்னிடம் அதிகாரம் இருந்தால் அனைவருக்கும் ஆயுள் தண்டனை கொடுத்து விடுவேன். யார் மகனுடனோ யாரோ ஆடலாம்? யார் பெண்ணுடன் யாரோ ஆடலாம்?. இந்நிகழ்ச்சியால் தமிழ்நாடு எதிர்காலத்தில் ஒரு தாய்லாந்து போல மாறிவிடும்' என்று விமர்சித்துள்ளார். ரஞ்சித் பேசிய இந்த கருத்தானது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




