ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகை ராகினி திவேதி. தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக 'நிமிர்ந்து நில்' படத்தில் நடித்தார். போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவரது மார்க்கெட் சரிந்தது. தற்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ள ராகினி, கன்னட சினிமாவில் மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அவர் நடித்த ஷீலா என்ற படம் சமீபத்தில் வெளியானது. தமிழில் 'கிக்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் 'ஈமெயில்' என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். முருகா அசோக்குமார் நாயகனாக நடித்துள்ளார். இரண்டாவது ஹீரோயினாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ள ஆர்த்தி நடிக்க, இரண்டாவது ஹீரோவாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் முக்கிய வேடங்களிலும், பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து தயாரிப்பாளரும், இயக்குநருமான எஸ்.ஆர் ராஜன் கூறும்போது, ‛‛ஹீரோயினுக்கு திடீரென ஒரு ஈமெயில் வருகிறது. அதில் குறிப்பிட்ட லிங்க்கை கிளிக் செய்து விளையாடினால் மிகப்பெரிய பரிசு காத்திருப்பதாக சொல்லப்படுகிறது, அந்த விளையாட்டிற்குள் இறங்கிய கதாநாயகி எதிர்பாராத விதமாக ஒரு மாபியா கேங்கில் சிக்கிக் கொள்கிறார். இதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா என்பதுதான் படத்தின் கதை. சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களில் நடக்கும் மோசடிகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மையப்படுத்தி இந்த படத்தின் கதையை உருவாக்கி உள்ளோம். காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக இந்த படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் உருவாகி உள்ளது'' என்றார்.