மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத், பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கேஜிஎப் 2 படத்தில் வில்லனாக நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார். அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்திலும் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் லியோ படத்தில் நடித்து வந்தபோது தன்னிடத்தில் சஞ்சய் தத், தமிழ் கற்றுக் கொண்டதாக, பிக்பாஸ் சீசன்- 7 சீசனில் போட்டியாளராக இருக்கும் மாயா தெரிவித்து இருக்கிறார். லியோ படப்பிடிப்பின் போது சஞ்சு பாபாவின் தமிழ் பயிற்சியாளராக வாய்ப்பு கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.