காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. வழக்கமாக லோகேஷ் கனகராஜ் படங்களில் இதுவரை தமிழ் சினிமாவில் இடம் பெறாத சில நட்சத்திரங்களும் அதிகம் கண்டுகொள்ளப்படாத நடிகர்களும் இடம் பெற்று தொடர்ந்து வெளிச்சம் பெற்று வருகின்றனர். அந்த விதமாக இந்த லியோ படத்தில் மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படம் துவங்கிய சமயத்தில் வெளியான காஷ்மீர் படப்பிடிப்பு புகைப்படத்திலும் விஜய் உள்ளிட்ட குழுவினருடன் இவரும் இடம்பெற்றிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பாடல் மற்றும் லியோ புகைப்படங்களில் விஜய்யுடன் அதிகம் இடம் பெற்றிருந்த மேத்யூ தாமஸ் இப்படத்தில் ரசிகர்களின் கவனம் ஈக்கும் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் லியோ திரைப்படம் வெளியாக இருக்கும் சந்தோசத்துடன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் மேத்யூ தாமஸ். ஏற்கனவே மலையாள திரையுலகில் தனது நடிப்பால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள மேத்யூ தாமஸ் கேரளாவில் லியோ திரைப்படம் வெளியாகும்போது இன்னும் பெரிய அளவில் கவனம் பெறுவார் என்பது உறுதி.