அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
நடிகர் விக்ரம் நடித்து வெளிவந்த கடந்த சில படங்கள் அவருக்கு கை கொடுக்காத நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‛பொன்னியின் செல்வன்' படங்கள் அவருக்கு வெற்றி படமாக அமைந்தன. தற்போது பா. இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார் விக்ரம். இதுதவிர நீண்ட நாட்களாக கிடப்பில் கடந்த ‛துருவ நட்சத்திரம்' படமும் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.
இதையடுத்து தனது அடுத்த படத்திற்கான கதை கேட்கும் பணிகளில் விக்ரம் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இதற்கு முன்பு விக்ரமை வைத்து இருமுகன் படத்தை தயாரித்த சிபு தமின்ஸ் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.