காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
கவுதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், வினாயகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'துருவ நட்சத்திரம்'.
2013ம் ஆண்டில் சூர்யா, பார்த்திபன், சிம்ரன் மற்றும் பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு பூஜையுடன் ஆரம்பமான படம். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கவுதம், சூர்யா இருவரும் பிரிய படம் அத்துடன் நின்று போனது. அதோடு கவுதமை குறை சொல்லி ஒரு பத்திரிகைச் செய்தியையும் வெளியிட்டார் சூர்யா.
அதன்பின் 2017ம் ஆண்டில் விக்ரம் நடிக்க இப்படத்தை ஆரம்பித்தார் கவுதம். இருப்பினும் பார்த்திபன், சிம்ரன் ஆகியோரை விடுவிக்காமல் இப்படத்திலும் நடிக்க வைத்தார். ஆறு வருடங்களுக்கும் மேலாக இழுத்து வந்த படம் ஒரு வழியாக முடிவடைந்து வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்து பார்த்திபன், “காலையில் ஒரு கப் தேனீர் கூடவே ஒரு ஸ்கிரிப்ட் (நடிக்கவோ/இயக்கவோ) மூழ்கிவிட போதுமெனக்கு. 'துருவி நட்சத்திரம்' படப்பிடிப்பில் GVMமுடன். 'வ' 'வி' ஆனது விபத்து அல்ல. துருவித் துருவி ஒவ்வொரு வார்த்தையாக “so of all the people U will break the law sir?” என நான் பேசியதில் Break என்ற வார்த்தை bake என கேட்பதாகக் கூறி 100 வது நாளாக டப்பிங். சிரத்தையுடன் சிரமத்துடன் சிறப்பாக வந்துவிட முயலும் gvmமின் படம் release ஆக gvmமும் விரைவில் relieve ஆக விருப்பம்!!!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆறு ஆண்டுகளாக 'துருவ நட்சத்திரம்' படத்திற்குள் மூழ்கியிருக்கும் கவுதம் அதிலிருந்து சீக்கிரம் விடுபட வேண்டும் என பார்த்திபன் நினைப்பதில் எந்தத் தவறுமில்லை.