தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

மலையாளத்திலிருந்து ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது விக்ரமுடன் இணைந்து தங்கலான் என்கிற படத்தில் நடித்துள்ளார். இன்னொரு பக்கம் தெலுங்கில் இயக்குனர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ராஜா டீலக்ஸ் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் மாளவிகா மோகனன். அந்த வகையில் அவரிடம் ஒரேநாளில் ஷாரூக்கானின் டங்கி மற்றும் பிரபாஸின் சலார் என இரண்டு படங்கள் வெளியாகிறதே.. நீங்கள் எந்த படத்தை பார்ப்பீர்கள்.. ஏதோ ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும் என ரசிகர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன், ஷாரூக்கானின் படம் பிடிக்கும் தான் என்றாலும் சலார் படத்தை தான் முதலில் பார்ப்பேன் என்று பதில் அளித்தார். அடுத்து அவர் பிரபாஸ் ஜோடியாக நடிப்பதால் சாமர்த்தியமாக பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




