பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் |
விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது அப்படத்தின் புரொமோஷன் பணிகளை தொடங்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் இதுவரை இந்த படத்தின் மூன்று போஸ்டர்களை வெளியிட்டுள்ள அவர், அதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு கேப்சனையும் கொடுத்து வருகிறார்.
தற்போது லியோ படத்தின் நான்காவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய போஸ்டர்களில் விஜய்யின் தோற்றம் மட்டுமே இடம்பெற்று வந்த நிலையில், இதில் விஜய்யுடன் சஞ்சய் தத்தும் இடம் பெற்றுள்ளார். விஜய் மிகவும் ஆவேசமாக சஞ்சய் தத்தின் கழுத்தை பிடித்து இருப்பது போன்று அந்த போஸ்டர் அமைந்திருக்கிறது. இது லியோ படத்தின் ஹிந்தி போஸ்டர் என்றும் அறிவித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இந்தாண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் லியோ படமும் ஒன்று. மாஸ்டர் படத்திற்கு பின் விஜய்யும், லோகேஷ் கனகராஜூம் மீண்டும் இணைந்துள்ளனர். அதிரடி ஆக் ஷன் படமாக தயாராகி உள்ளது. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன், மன்சூரலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் தயாரித்துள்ளார். வரும் அக்., 19ல் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பன்மொழிகளிலும் வெளியாகிறது.