லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மலையாளத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சைக்கோ திரில்லர் கதையம்சத்துடன் வெளியான ‛பாரன்சிக்' திரைப்படம் வெற்றியை பெற்றது. டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை அகில்பால் அனாஸ்கான் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கியிருந்தனர். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர்கள் மீண்டும் டொவினோ தாமஸ் நடிப்பில் ஐடென்டிடி என்கிற படத்தை இயக்கி வருகின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். வில்லனாக வினய் ராய் நடிக்கிறார். ஆக்ஷன் பின்னணியில் உருவாகி வருகிறது.
தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார் பாலிவுட் நடிகை மந்த்ரா பேடி. இவரை வரவேற்கும் விதமாக ஒரு போஸ்டரை வெளியிட்டு வரவேற்றுள்ள நாயகன் டொவினோ தாமஸ், “ஒரு பவர்புல்லான ஆக்ஷன் கதையில் ஒன்றாக இணைந்து பணியாற்ற உள்ளோம்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
தமிழில் சிம்புவின் மன்மதன் திரைப்படத்தில் மட்டும் நடித்துள்ள மந்த்ரா பேடி, முதன்முறையாக மலையாளத்தில் நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.