ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

'அட்டகத்தி' படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தினேஷ். குக்கூ, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருடன் போலீஸ், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது ஜே பேபி, தண்டாகாரன்யம், படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் கருப்பு பல்ஸர், லப்பர் பந்து போன்ற படங்களின் நடித்து வருகிறார். தற்போது வித்தியாசமான கெட்டப்பில் தன்னை மாற்றிக் கொண்டு ஸ்டைலாக வலம் வருகிறார் தினேஷ். இந்த புதிய லுக்கை அவரே வெளியிட்டுள்ளார். மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக இந்த புதிய லுக்கில் அவர் உள்ளார் என்கிறார்கள். படம் பற்றிய மற்ற தகவல்களை அவர் வெளியிடவில்லை.




