குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட வர்த்தக சபை இவற்றைப்போன்று செயல்பட்டு வரும் இன்னொரு அமைப்பு கில்டு என்று அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்படம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம். இதன் தலைவராக சண்டை இயக்குனர்ஜாக்குவார் தங்கம் செயல்பட்டு வருகிறார். இவர் தேர்தலை நடத்தாமல் சர்வாதிகார போக்குடன் நடந்து வருவதாக கில்டு உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் புகார் கூறி வருகிறார்கள். இது தொடர்பான வழக்கும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஜாக்குவார் தங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கில்டில் தற்போது 6 கோடி ரூபாய் பணம் உள்ளது. அதனை கைப்பற்ற சிலர் முயற்சி செய்கிறார்கள் என்றார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக சில பிரச்சினைகள் சென்றுகொண்டு இருக்கிறது. இதுகுறித்து ஒரு சில உறுப்பினர்கள் என்னை பற்றி தவறாக சொல்லி வருகின்றனர். கடந்த 2015ல் நான் கில்டு செயலாளராக பொறுப்பேற்றேன். அப்போது சங்கத்தில் சில ஆயிரங்கள் தான் இருந்தது. 2018ல் தலைவரான பின்பு இன்று ரூ.6.50 கோடி உள்ளது.
2018ல் நடந்த தேர்தலில் நான் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். எனது அணியில் சிலரும் எதிர் அணியில் சிலரும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் வந்ததும் சங்கத்தை பூட்ட வேண்டும் என்றனர். நான் ஏன் பூட்ட வேண்டும் என்றேன். இதில் சில விஷயங்கள் நடக்கிறது பூட்டிவிட்டு மீண்டும் திறக்கலாம் என்றனர். நான் முடியாது என்றேன். அப்போது தனியாக மீட்டிங் நடத்தினர். வங்கியில் உள்ள பணத்தை எடுக்க தங்களுக்கு தான் உரிமை உள்ளது என்றனர். ஏனென்றால் அவர்களது நோக்கம் பணத்தை எடுப்பது தான். வங்கியில் போலியாக லெட்டர் பேட் தயாரித்து பணத்தை எடுக்க முயற்சித்தனர்.
என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியதாக கூறினார்கள். நான் அவர்களை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினேன். இதனால் அவர்கள் நீதிமன்றம் சென்றனர். ஆனால் நீதிமன்றம் அவர்கள் உள்ளே வரக்கூடாது என்று உத்தரவிட்டது. அவர்கள் மீது பல புகார்கள் காவல்நிலையத்தில் உள்ளது.
வடபழனியில் 13 கோடியில் சங்கத்திற்கு இடம் பார்த்தோம். இதன் மூலம் கில்டு உறுப்பினர்களுக்கு உதவி செய்ய நினைத்தோம். இது எதிரிகளுக்கும் சில சங்கங்களுக்கும் பிடிக்கவில்லை. இதனால் என் மீது பல குற்றச்சாட்டுக்கள் வைத்தனர். கில்டு பணத்தை எடுத்து விட்டேன் என்றனர். தற்போது அவர்கள் மீது நான் வழக்கு தொடுத்து எப்ஐஆர் போடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சங்கத்திற்கு தேர்தல் வேண்டும் என்று நான்தான் நீதிமன்றத்தில் கேட்டேன். ஆனால் நான் தேர்தல் நடத்தமாட்டேன் என்கிறேன் என்று சொல்கின்றனர். சந்தா கட்டமுடியாத விரல்விட்டு எண்ணக்கூடிய சில உறுப்பினர்கள் தேர்தல் நடத்த விடமாட்டேன் என்கின்றனர். மேலும் கில்டு சங்கம் போலவே இவர்களும் ஒரு சங்கத்தை தொடங்கி கோடிக்கணக்கில் வசூல் செய்தனர். இதையும் நீதிமன்றம் மூலம் தடுத்தோம்.
நான் இருக்கும் வரை பணத்தை எடுக்க முடியாததால் வேறு நபரை வைத்து எடுக்க பார்க்கிறார்கள். நான் 2023 வரை உள்ள உறுப்பினர்களை வைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்கிறேன். ஆனால் அவர்கள் 2013 வரை உள்ள உறுப்பினர்களை வைத்து மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும் என்கின்றனர் இதுதான் தற்போது வரை பிரச்சினயாக உள்ளது. மூன்று வருடமாக தேர்தல் நடத்த முயற்சித்து வருகிறேன்" என்கிறார் ஜாக்குவார் தங்கம்.