ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

முன்பெல்லாம் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடித்து முடித்ததும் இமயமலைக்கு ஆன்மிக பயணம் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். அங்கு சென்று பாபாஜி உள்ளிட்ட பல கோயில்களில் தரிசனம் செய்வது, மலைக் குகைகளில் அமர்ந்து தியானம் செய்வது என்று சுற்றி வந்தார் ரஜினி. பின்னர் அவரது உடல்நிலையை காரணம் காட்டி இமயமலைக்கு செல்வதை தவிர்த்து வந்தார். இருப்பினும் சில ஆண்டுகளுக்கு முன் சென்று வந்தார். சமீபத்தில் ஜெயிலர், லால் சலாம் படங்களில் நடித்து முடிந்தது மாலத்தீவுக்கு சென்று ஓய்வெடுத்த ரஜினி இரு தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். தொடர்ந்து ஜெயிலர் பட இசை வெளியீட்டில் பங்கேற்றார். இந்த நிலையில் அடுத்தபடியாக ஆகஸ்ட் 6ஆம் தேதி அவர் இமயமலைக்கு ஆன்மிக பயணம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்கு ஒரு வார காலம் தங்கி இருந்து பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளாராம் ரஜினி. அதன்பின் ஞானவேல் இயக்கத்தில் தனது 171வது படத்தில் நடிக்க போகிறார்.




