தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
1980களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் கே.ரங்கராஜ். நெஞ்சமெல்லாம் நீயே, பொண்ணு புடிச்சிருக்கு, நிலவு சுடுவதில்லை, உன்னை நான் சந்தித்தேன், உதயகீதம், கீதாஞ்சலி, உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், பாடு நிலாவே, நினைவே ஒரு சங்கீதம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர். கடைசியாக 1992ம் ஆண்டு 'எல்லைச்சாமி' என்ற படத்தை இயக்கினார். சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கினார்.
தற்போது 31 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. படத்தை கணபதி பிச்சர்ஸ் சார்பாக மாணிக்கம் தயாரிக்கிறார். ஸ்ரீகாந்த் நாயகனாகவும், பூஜா நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர கே.ஆர்.விஜயா, சச்சு, நளினி, டெல்லி கணேஷ், ரமேஷ் கண்ணா, அனு மோகன், சிங்கம்புலி, அமித் பார்கவ், வினோதினி, சுஜாதா, மாஸ்டர் விஷ்ணவா, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.