டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? |

இயக்குனர் பாரதிராஜா தனது திரைப்படங்களில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு 'ஆர்' என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை வைத்துள்ளார், அவர்கள் பிற்காலத்தில் பெரிய நடிகைகளாக வளர்ந்தார்கள். அந்த வரிசையில் தற்போது அவரது மகன் மனோஜ் இயக்கும் 'மார்கழி திங்கள்' என்ற படத்திற்கு தேர்வாகி உள்ள புதுமுகத்திற்கு 'ரக்ஷனா' என்று பெயர் சூட்டி உள்ளார். இந்த படத்தை சுசீந்திரன் தயாரிக்கிறார்.
இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் மூலம் என் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தை வெண்ணிலா புரொடக்ஷன் சார்பில் இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இப்படத்தின் நாயகியை மக்களாகிய நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள், இந்த கதையின் நாயகிக்கு ராதிகா, ராதா, ரேவதி, ரேகா போன்று ஆர் வரிசையில் 'ரக்ஷனா' என்று பெயர் சூட்டுகிறேன். இவர் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வெற்றியடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.