சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி | 73வது பிறந்தநாளை கொண்டாடிய இசையமைப்பாளர் தேவா! | விடாமுயற்சி படத்தின் சிறு பிஜிஎம் வைரல் | சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சூர்யா - சிவா வழிபாடு | விவாகரத்து வழக்கு ; தனுஷ் - ஐஸ்வர்யா நேரில் ஆஜர் : பிரிவதில் இருவரும் உறுதி | விமர்சனங்கள், தியேட்டர் கருத்துக்கள்…தடுக்க முடியுமா? |
வயிற்றில் சுமந்து, உதிரத்தை கொடுத்து, பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கும் அம்மாக்களுக்கு எந்த காலத்திலும் ஒரு பிள்ளையால் கைமாறு செய்துவிட முடியாது. ‛அம்மா' எனறால், ‛அன் கண்டிஷனல் லவ்'. எப்போதும் அவர் எனக்கு ‛ஸ்பெஷல்' தான். என் ‛பெஸ்ட் பிரண்ட்' என்கிறார் நடிகை சாக் ஷி அகர்வால். அவர் தொடர்கிறார்.
சென்னை அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் படித்தேன். 'கோல்டு மெடலிஸ்ட்' நான். பின் எம்.பி.ஏ., முடித்தேன். படிக்கும் போது இரவு என்னுடன் கண் விழித்திருந்து காபி போட்டுக் கொடுப்பது உள்ளிட்ட தேவைகளை பாசத்துடன் செய்தவர். நான் துாங்கிய பின் தான் அவர் துாங்குவார். அந்த நினைவுகள் மனதில் பசுமையாக உள்ளது.
அம்மாவை பார்த்து தான் தன்னம்பிக்கையை கற்றுக்கொண்டேன். அவர் தான் ஒரு பெண்ணாக 'சொந்தக் காலில்' நிற்கவும் எனக்கு கற்றுக்கொடுத்தார். சோர்வு ஏற்படும் போதெல்லாம் அவரை பார்த்தாலே எனக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.
படித்து விட்டு நான் சினிமா துறைக்குள் நுழைந்தபோது குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் 'நீ எங்கே சென்றாலும் சாதிப்பாய்…' என நம்பிக்கை கொடுத்து அனுப்பியவர் அம்மா. 'சினிமாவில் ஏற்றம் இறக்கம் இருக்கும். வெற்றியை ஓவராக கொண்டாடவும் கூடாது; தோல்வி என்றால் முடங்கி விடவும் கூடாது' என வாழ்க்கையின் சூத்திரத்தை கற்றுக் கொடுத்தவர்.
இப்போதும் நான் சூட்டிங்கில் இருக்கும்போதெல்லாம் அடிக்கடி போன் செய்து நலம் விசாரிக்க தவறுவதில்லை. எனக்கு தோழியாகவும், என் தெய்வமாகவும் இருப்பவர் என் அம்மா சுதா அகர்வால். ஐ லவ் யூ அம்மா.