பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

ஹிந்தியில் அறிமுகமாகி தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறவர் அதா சர்மா. தமிழில் ‛இது நம்ம ஆளு, சார்லி சாப்ளின் 2' படங்களில் நடித்தார். இவர் நடித்த ஹிந்தி படமான ‛செல்பி' சமீபத்தில் வெளிவந்தது. இந்த நிலையில் அதா சர்மா நடித்துள்ள ஒரு படம் இந்தியாவையே உலுக்கி வருகிறது. அது ‛தி கேரளா ஸ்டோரி'.
‛‛கேரளா ஸ்டோரி படத்தில் நடிப்பதற்கு முன்பு இயக்குனரின் ஏற்பாட்டின் பேரில் கதையில் குறிப்பிடப்படும் பெண்களை நேரில் சந்தித்து அவர்கள் அனுபவித்த கொடுமைகளை கேட்டறிந்தேன். அழகான குடும்பங்களில் இருந்து அவர்கள் ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கதையை கேட்டு கலங்கினேன்.
படம் பற்றி வரும் புகார்களையும், விமர்சனங்களையும் நான் அறிவேன். 2 நிமிட டிரைலரை பார்த்து விட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டாம். இரண்டு மணி நேர படத்தை பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள். இந்த படத்தில் நடித்தற்காக கேரளாவை சேர்ந்த பெண்கள்கூட எனக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்த படம் அரசியல் பேசவில்லை. மதவாதம் பேசவில்லை. பயங்கரவாத்தையும், மனிதநேயத்தையும் பேசுகிறது. கருத்து சுதந்திரம் உள்ள நாட்டில் விமர்சனங்களை வரவேற்போம்''. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.