சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

வேகமாக வளர்ந்த வந்த இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோனியாக நடித்து புகழ் பெற்றார். கடந்த 2020ம் ஆண்டு, மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவர் மறைவு இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலை வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட வீட்டை அவரது உறவினர்கள் வாடகைக்கு விட முயற்சி செய்தனர். ஆனால் யாரும் அந்த வீட்டில் குடியேறத் தயங்கினர். விலைக்கு வாங்கிக் கொள்ளவும் யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் பாலிவுட் நடிகை அடா சர்மா அந்த வீட்டை வாங்க உள்ளார். அடா சர்மா பரபரப்பை கிளப்பி 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் நடித்தவர், தமிழில் 'சார்லி சாப்ளின் 2' படத்தில் நடித்தார், 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அடா சர்மா “பணிகள் நடந்து வருகிறது. எல்லாம் முழுமையான பிறகு நானே முறைப்படி அறிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.