ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசை அமைப்பதற்கு இணையாக இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அந்த வரிசையில் மாராட்டிய மாநிலம் புனேயில் அவரது இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. அங்குள்ள ராஜ் பகதூர் மில் வளாகத்தில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியை காண திரளான மக்கள் கூடியிருந்தனர்.
நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது மேடைக்கு முன்னால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி நிகழ்ச்சியை நிறுத்துமாறு சத்தமாக கூறினார். இதை கண்டு திடுக்கிட்ட ஏ.ஆர்.ரஹ்மான் எதற்காக என்பது போல் அந்த அதிகாரியை பார்க்க... அவர் இரவு 10 மணிவரைதான் இசை நிகழ்ச்சி மணி 10 ஆகிவிட்டது என்றார். தனது கை கடிகாரத்தை பார்த்த ரஹ்மான் புன்னகை செய்தபடியே நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.
“இசை நிகழ்ச்சி நடத்த இரவு 10 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அந்த நேரம் கடந்து விட்டதால் இசை நிகழ்ச்சியை நிறுத்துமாறு நாங்கள் கேட்டுக் கொண்டோம். உடனடியாக ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது குழுவினரும் இசை நிகழ்ச்சியை நிறுத்தி விட்டனர். எனவே வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை” என்று போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.




