Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கே.ஜி.எப் நடிகை மருத்துவமனையில் அனுமதி! ஷாக்கிங் புகைப்படம்

16 ஏப், 2023 - 11:25 IST
எழுத்தின் அளவு:
KGF-actress-admitted-to-hospital!

சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மாளவிகா அவினாஷ், தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார். அதேபோல சின்னத்திரையிலும் 28 வருடங்களாக மோஸ்ட் வாண்டட் நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில், மாளவிகா திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டிருந்த மாளவிகா, மருத்துவமனையில் இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு, 'ஒற்றை தலைவலி தானே என்று அஜாக்ரதையாக இருக்காதீர்கள். பாரம்பரிய மருந்துகளை மருத்துவர் பரிந்துரையின்றி எடுக்க வேண்டாம். சாதாரண தலைவலியாக இல்லாமல் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் சிக்கலாக இருக்கலாம்' என்று அதில் கூறியிருந்தார்.

மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவரது முகமே ஒரு பகுதி முழுவதும் வீங்கி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். எனவே, அவருக்கு வேறு எதுவும் பெரிய பிரச்னையா என பலரும் பயத்துடன் கேட்டு வந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'தற்போது உடல்நிலை பரவாயில்லை. எனக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் எனது நன்றி' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் மாதவனுக்கு விருந்தளித்த இயக்குனர் சுதா கொங்கராநடிகர் மாதவனுக்கு விருந்தளித்த ... 50வது படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி 50வது படத்தில் இரண்டு வேடங்களில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)