யஷ், பிரபாஸ் பாணியில் களமிறங்கும் சர்வானந்த் | சிபிசிஐடி அதிகாரியாக நடிக்கும் கவுதம் | மக்களின் கருத்தை அறிய அமெரிக்காவில் 'ராமாயணம்' திரையீடு | தமிழுக்கு வரும் ரியா ஷிபு | பிளாஷ்பேக்: சீரியஸ் கதையை சிரிப்பு கதையாக மாற்றிய விசு | பிளாஷ்பேக்: ஒரே ஆண்டில் 8 ஹிட் படங்கள் கொடுத்த சிவாஜி | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணப் பதிவு 36 மில்லியன் லைக்ஸ் | மார்ச் 6ல் அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் திருமணம் | காலையில் தெலுங்கு முறைப்படி, மாலையில் கொடவா முறைப்படி…விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் | சிம்புவை வைத்து வரலாற்று படத்தை திட்டமிட்ட ராஜூ முருகன்! |

பாலிவுட் வில்லன் நடிகர் ராகுல் தேவ். தமிழில் நரசிம்மா, முனி, ஆதவன், வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தி லெஜண்ட் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். சமீபத்தில் தனது நேர்காணல் ஒன்றில் தென்னிந்திய படங்கள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: நிஜ வாழ்க்கைக்கு சிறிதும் தொடர்பில்லாத வகையில் தென்னிந்திய படங்கள் உருவாகின்றன. அதில் வரும் ஆக்ஷன் காட்சிகள் லாஜிக் மீறல்களாக இருக்கின்றன. குறிப்பாக, 1980களில் வந்த பாணியை பின்பற்றித்தான் இப்போதைய தென்னிந்திய படங்களை எடுக்கிறார்கள். ஆனால் ஹீரோயிச மாயை வைத்தும், பொழுதுபோக்கு அம்சங்களை நிரப்பியும் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள். நானே கூட இதுபோன்ற படங்களில் நடித்திருக்கிறேன்.
அப்போது எனது மூளையை கழற்றி வீட்டில் வைத்துவிட்டுதான் படப்பிடிப்புக்கு செல்வேன். ஜிம் பாடியான என்னை, வலுவிழந்த ஹீரோ அடித்து உதைப்பதை நான் சகித்துக்கொண்டுதான் ஆக வேண்டும். தியேட்டரில் அதற்கு கைதட்டல் விழுந்தால்கூட நான் அமைதியாகத்தான் இருக்க வேண்டும். இதில் எது சரி, எது தவறு என சொல்ல வரவில்லை.
அதேசமயம், கற்பனைக்கு றெக்கை கட்டும்போது அதை சாமானிய ரசிகன் ரசித்து பார்க்கிறான். இரண்டு பேர் நிஜத்தில் சண்டையிட்டால், அவர்கள் தங்களது ஜிம் பாடியை காட்ட மாட்டார்கள். ஆனால் சினிமாவில் சட்டையை கிழித்து சிக்ஸ்பேக்கை காட்ட வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




