அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடந்த மார்ச் 26ம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், சங்க உறுப்பினர்களான கமல்குமார், சீனிவாசன் உள்பட 8 தயாரிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் நடத்தும் அதிகாரியாக தயாரிப்பாளர் சங்கம் நியமித்திருந்த ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமனுடன் ஓய்வு பெற்ற நீதிபதி வி.பாரதிதாசனையும் கூடுதல் அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் “நிர்வாகிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 1ம் தேதி நடைபெற உள்ளது” என்று தெரிவித்தார்.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் “தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் வகையில் அனைத்து நடைமுறைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். தேர்தல் நடைபெறும் அன்றே வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். வாக்குஎண்ணிக்கை நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து ஏப்ரல் 30ம் தேதி தேர்தல் நடத்த அனுமதி அளித்த நீதிமன்றம், மனுதாரர்களுக்கு குறைகள் இருந்தால் அதனை தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியதுடன். தேர்தல் முடிந்த உடன் அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.