இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டியில், "இந்தி பட உலகில் என்னை ஓரம்கட்ட ஒரு கும்பல் சதி செய்தது. அவர்கள் செய்த அரசியலை என்னால் தாங்க முடியவில்லை. அதனாலேயே ஹிந்தி படங்களில் நடிக்காமல் ஹாலிவுட்டுக்கு போனேன்'' என்றார்.
இந்த கருத்திற்கு கங்கனா ரணாவத், மீரா சோப்ரா உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்தனர். நடிகை நீத்து சந்திராவும் ஹிந்தியில் வாரிசுகள் ஆதிக்கத்தை கண்டித்துள்ளார்.
நீத்து சந்திரா கூறுகையில், "இந்த பிரச்சினை ஒருவருக்கு மட்டும் இல்லை. எல்லோருக்குமே இதே நிலைமைதான் இருக்கிறது. சினிமா குடும்பத்தை சேர்ந்த வாரிசாக நீங்கள் இல்லை என்றால் பட வாய்ப்புக்காக போராட வேண்டும். ஏதேனும் வாய்ப்பு கிடைத்தாலும் அது நீண்டகால தாமதத்துக்கு பிறகே கிடைக்கும். இதை பிரியங்கா உள்பட பலர் உணர்ந்து இருக்கிறார்கள். ஆனால் இதுபற்றி பகிரங்கமாக பேச யாரும் முன் வருவது இல்லை'' என தெரிவித்துள்ளார்.