சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஏற்கனவே விஜய்தேவரகொண்டாவும், இவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் ஜோடியாக வெளிநாட்டிற்கு சென்ற புகைப்படங்களும் வெளியாகி அந்த காதலை உறுதிப்படுத்துவது போல் அமைந்தது.
இந்நிலையில் இப்போது விஜய்தேவரகொண்டாவுடன் காதலை ராஷ்மிகா முறித்துக்கொண்டு உள்ளதாகவும் தற்போது தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டசாய் ஸ்ரீநிவாஸ் மீது ராஷ்மிகாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாகவும் தெலுங்கு திரையுலகில் தகவல் பரவியுள்ளது.
சமீபத்தில் விமானநிலையத்தில் ராஷ்மிகாவையும் பெல்லம்கொண்ட ஸ்ரீநிவாஸையும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்த போட்டோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.