ரீல்ஸ் பிரபலங்கள், ரியலில் திணறுகிறார்கள் : வடிவுக்கரசி ஆதங்கம் | ஜன.,9ல் ரிலீசாகிறது 'ஜனநாயகன்': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | முன்பதிவில் மட்டுமே 58 கோடி வசூலித்த 'எல் 2 எம்புரான்' | கஜினி 2 பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | டியர் ஸ்டூடன்ட்ஸ் படப்பிடிப்பு முடிந்தது | பிரபாஸிற்கு வில்லன் ஆகிறாரா விஜய் சேதுபதி? | ''இந்த மாதிரி படம் எடுங்க.. ஜெயிக்கலாம்'': வெற்றி சூத்திரம் சொன்ன பாக்யராஜ் | 'குபேரா' இயக்குவதில் பெருமை : சேகர் கம்முலா | என் ஹார்ட் டிஸ்கை தாங்க.... : பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் போராட்டம் | விஜய்யின் 'ஜனநாயகன்' : முக்கிய அறிவிப்பு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.
காஷ்மீரில் முதற்கட்ட படப்பிடிப்பு 60 நாட்கள் நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து இன்னும் 60 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. அத்துடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவுபெறும். விரைவில் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பராஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுவரைக்கும் எந்த தமிழ் படமும் விலை போகாத அளவிற்கு விலை போகியுள்ளதாம் சுமாராக ரூ. 70 கோடிக்கு பராஸ் நிறுவனம் லியோ படத்தை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.