ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் குஷி, சிவகாசி | 'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் | ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது! யாரை சொல்கிறார் தனுஷ்? | ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்' தொடரில் முல்லை கேரக்டரில் நடிப்பவர்கள் சினிமாவில் ஹீரோயின் ஆகிவிடுகிறார்கள். தற்போது நடித்து வரும் லாவண்யா, ரேசர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் நடித்த காவ்யா அறிவுமணி 'ரிப்பப்பரி' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் நாயகனாக மகேந்திரன் நடித்தாலும் காவ்யா அவருக்கு ஜோடி இல்லை. ஆனால் படத்தின் நாயகி அவர்தான். மகேந்திரன் ஜோடியாக மலையாள நடிகை ஆர்த்தி நடிக்கிறார். இவர்கள் தவிர யு-டியூபர் மாரி, நோபல் ஜேம்ஸ், செல்லா மற்றும் தனம் ஆகியோர் நடிக்கின்றனர். சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார், திவாகராஜன் இசை அமைக்கிறார். அருண் கார்த்திக் இயக்குகிறார்.
“படத்தின் பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. இது ஒரு வித்தியாசமான பேய் படம். இந்த படத்தில் வரும் பேய்க்கு ஜாதி வெறி. தன் ஜாதியை சேர்ந்த பெண்ணோ, ஆணோ வேறு ஜாதியினரை திருமணம் செய்து கொண்டால் தீர்த்து கட்டிவிடும். அந்த பேயை கண்டுபிடித்து நண்பர்கள் எப்படி திருத்துகிறார்கள் என்பதை காமெடியாக சொல்லும் படம்” என்கிறார் இயக்குனர் அருண் கார்த்திக்.