கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருப்பதாக ஒரு போஸ்டர் மூலம் அறிவித்துள்ள லைகா நிறுவனம், ரசிகர்களுக்கு ஹோலி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதியில் நடைபெறுவதாகவும், அங்கு ரஜினிகாந்த் மற்றும் அவரது தங்கையாக நடிக்கும் ஜீவிதா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்று முதல் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க, விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கிறார்கள்.