ஜூன் 1ல் இளையராஜாவின் ‛சிம்பொனி' வெளியீடு | ஜூலையை குறிவைக்கும் ‛டயங்கரம்' | 'பெத்தி' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | பரிமளா அண்ட் கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா...? | 19 ஆண்டுகளுக்கு பின் ஜீவா, அஞ்சலி கூட்டணி | கர்ணபரம்பரையாக கேட்டு மகிழ்ந்த “கண்ணகி” கதையின் கலையுலக சாதனை | ‛கருப்பு 300' கோடி வசூலிக்குமா?, மூக்குத்தி அம்மன் 3 உருவாகுமா? | கீர்த்தி சுரேஷின் ‛ரப்தார்' ரிலீஸ் தேதி மாற்றம் | 'பெத்தி' படத்திற்கு வந்த புதிய சிக்கல் | 58 மணி நேரத்தில் 100 கோடி வசூலித்த 'திரிஷ்யம் 3' |

நடிகர் கமல்ஹாசன் முதன் முதலாக ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றினார். அதன்பிறகு மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது 'கமல் பண்பாட்டு மையம்' என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உள்ளார். இதன் தலைவராக கமல் இருப்பார். இது அரசியல் சார்பற்ற லாப நோக்கமற்ற அமைப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலை இலக்கிய பண்பாட்டு பணிகளை செய்யவும், அரசியல் சார்பற்ற பொது சேவைகளுக்காகவும் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளதாக நேற்று நடந்த கட்சியின் நிர்வாக குழுவில் அறிவிக்கப்பட்டது.




