ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

இந்தியாவில் பைக் சுற்றுப் பயணத்தை முடித்துள்ள அஜித் அடுத்து உலக பயணத்தை தொடர இருக்கிறார். இந்த நிலையில் இந்திய சுற்று பயணத்தில் அவருடன் இருந்த நண்பர் உதயகுமார், அஜித்துடன் நடந்த உரையாடல் குறித்து தனது சமூகவலைதளத்தில் எழுதியிருப்பதாவது:
எதிர்மறையான விமர்சனங்கள், வெறுப்பூட்டும் செய்திகள், ட்ரோல்கள், எதிர்மறையான மீம்ஸ்கள் ஆகியவற்றை எப்படி எதிர்கொள்கிறார் என்று அஜித்திடம் கேட்டேன். அதற்கு அவர் ஒரு குட்டி கதையை பதிலாக சொன்னார்.
இத்தகைய செயல்களை நிறுத்துமாறு சொல்வது, இறைச்சிக்காக விலங்குகளைக் கொல்வதை நிறுத்துமாறு கசாப்புக் கடைக்காரரிடம் கோரிக்கை வைப்பதைப் போன்றது. அப்படி அவரிடம் சொன்னால், அவர், அசைவைப் பிரியர்களும் இங்கே இருக்கிறார்கள், அதற்கு சந்தை இருக்கிறது என்று நிச்சயமாகப் பதிலளிப்பார்.
அப்படி அவர் அதை செய்யாமல் விட்டுவிட்டால், நிச்சயம் வேறு யாராவது ஒருவர் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அவ்வாறு செய்வார். அதேபோல் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அத்தகைய ட்ரோல்களையும், எதிர்மறை விமர்சனங்களையும் விரும்புகிறார்கள். மற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் தீங்கு விளைவிக்காத வரையில் இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான். என்று கூறினார்.
இவ்வாறு உதயகுமார் தனது பதிவில் தெரிவித்திருக்கிறார்.




