ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
1989 ஆம் ஆண்டில் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கனகா. அதன்பிறகு ரஜினியுடன் அதிசய பிறவி உள்ளிட்ட பல படங்களில் நடித்த கனகா, ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு வெளியேறி விட்டார். அதோடு தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வி காரணமாக அவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டில் அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில், தனக்கு 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டதாக குறிப்பிட்டு இருந்த கனகா, விரைவில் தனது உடை, ஹேர் ஸ்டைல் என அனைத்தையும் மாற்றிக்கொண்டு மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் தனது தந்தையுடன் வசித்து வரும் கனகாவின் வீட்டில் நேற்று மாலை திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டு அவரது வீட்டில் இருந்து புகைமண்டலம் கிளம்பியுள்ளது. இது குறித்து தீயணைப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளார் கள். அதோடு கனகா வீட்டின் பூஜை அறையில் விளக்கின் தீப்பொறி பட்டு வீட்டுக்குள் தீ பரவியதாகவும், அதை அவர்கள் கவனிக்காமல் விட்டு விட்டதால் அங்குள்ள துணிகள் உள்பட பல பொருட்கள் எரிந்து சாம்பலாகி விட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.